அரசாங்கத்தின் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” என்ற பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களில் நேற்று(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அபிவிருத்தியில் வரலாற்றுச் சாதனையாக ஒரே நாளில் 46.8 கோடி (468மில்லியன்) ரூபா பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படது.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தின் வரலாற்றுச் சாதனை மிக்க சுயதொழில், கூட்டு வியாபாரமுயற்சி மற்றும் தொழில் வாய்ப்பு அபிவிருத்திக்காக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள அனைத்து ஊர்களிலுள்ள பயனாளிகளுக்கும் 46.8 கோடி (468மில்லியன்) ரூபா பெறுமதியான மூலதனப் பொருட்கள், பொறிகள் மற்றும் இயந்திரங்களுக்கான சான்றிதழ்கள் என்பன அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான அபூவக்கர் ஆதம்பாவாவினால் கீழ் குறிப்பிடப்படும் ஊர்களில் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை – 3.6கோடி (36மில்லியன்), கல்முனை வடக்கு – 3.4 கோடி (34மில்லியன்), நாவிதன்வெளி – 3.2 கோடி (32மில்லியன்), சாய்ந்தமருது – 2.1 கோடி (21மில்லியன்), காரைதீவு – 2.1 கோடி ( 21மில்லியன்), சம்மாந்துறை – 7.1 கோடி (71மில்லியன்), நிந்தவூர் – 2.9 கோடி ( 29மில்லியன்), அட்டாளைச்சேனை 4.5 கோடி ( 45மில்லியன்), அக்கறைப்பற்று – 3.7 கோடி (37மில்லியன்), ஆலையடி வேம்பு – 3 கோடி (30மில்லியன்), இறக்காமம் – 2.7 கோடி (27மில்லியன்), திருக்கோவில் – 3.9 கோடி (39மில்லியன்), பொத்துவில் – 4.6 கோடி (46மில்லியன்) என ஒரே நாளில் 46.8 கோடி (468மில்லியன்) ரூபா வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்து நிகழ்வுகளிலும் பாராளுமன்ற உறுப்பினரோடு பிரதேச செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாறானதொரு பெரும் தொகை நிதி ஒதுக்கீடு சுயதொழில் கூட்டு வியாபார முயற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்காக அம்பாறை கரையோர மாவட்டத்தில் நடைபெற்றது. அபிவிருத்தியில் வரலாற்று சாதனைக்கான ஒரு நிகழ்வாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

