முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக முக்கிய முல்லைத்தீவு திருகோணமலை இணைப்புப் பாலமாக கருதப்படும் கொக்கிளாய் முகத்துவாரம் பால நிர்மாணிப்புக்கு விரைவில் நிதி ஒதுக்கப்படும் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
இன்று(03) முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

