அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காஞ்சிரன் ஸ்ரீ வள்ளிபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த வள்ளி அம்மன் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. அதன் சூழலானது மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அதனை துப்பரவு செய்யும் பணியினை விநாயகபுரம் முத்துமாரி அம்மன் ஆலய அறநெறி பாடசாலையினரால் முன்னெடுக்கப்பட்டதுடன் குரு பூசை நிகழ்வும் கூட்டுப்பிராத்தனை என்பனவும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச இந்து கலாசார உத்தியோத்தர் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு, திருநாவுகரசர் நாயனார் குருகுலப்பணிப்பாளர், அம்பாறை மாவட்ட திரிவதிகை கலைக்கூடத்தின் உறுப்பினர், தம்பிலுவில் கண்ணகை அம்மன் அடியார்கள் திருக்கூட்டம் அமைப்பின் உறுப்பினர், குறித்த அறநெறிப்பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமுகதொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வானத்தினருடன் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் இவ் ஆலய ஒரு மதமாற்றம் பெற்ற சமுகத்தின் நடுவில் கவனிப்பாரற்றுஸகாணப்படுகின்றதுடன் அவ் ஆலய உடமைகளும் திருடுபோய் காணப்படுகின்றன.
அதனை சீர் செய்து மற்ற ஆலயங்கள் மாதிரி மாற்றுவதற்கான எதிர்கால நடவடிக்கை பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

