உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) காலை பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில்,”காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கான சுற்றாடல் சம்பந்தமான விழிப்புணர்வு விசேட உரையினை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சுற்றாடல் பிரிவில் கடமையாற்றும் சமூக ஆர்வலர் எம்.எம். சிபான் ஆற்றியிருந்ததுடன், ஆசிரியர்களுக்கான உறுதிமொழியினை ஆசிரியர் எம்.எஸ்.எஸ். ஷிப்லி ஆசிரியரினால் வாசித்து மொழியப்பட்டதுடன் பிரதேச செயலகத்தில் சுற்றாடல் பிரிவில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எஸ். சருன்னிஸா மற்றும் எம்.வை. றிஸ்மியா பேகம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அத்துடன், மாணவர்களுக்கான உறுதிமொழி தரம் 11 ஐ சேர்ந்த மாணவத் தலைவர் ஐ.எல்.எம். இன்பாஸினால் வாசித்து மொழியப்பட்டதுடன் அவ்வுறுதிமொழி அனைத்து மாணவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில், பிரதியதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

