சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எம்.எம். ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது.

 

‘சுற்றாடலுக்கு ஒரு மடல்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வுகளை இணைப்பாட விதானத்திற்குப் பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌஷான் நெறிப்படுத்தி, மாணவர்களுக்கான சுற்றாடல் விழிப்புணர்வு தொடர்பான விஞ்ஞான ரீதியில் அமைந்த விசேட உரையையும் ஆற்றியிருந்ததுடன், கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதியதிபர் எம்.ஏ.எம். சிராஜ் தொகுத்து வழங்க, ஆசிரியர்களுக்கான உறுதிமொழியினை நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதியதிபர் எம்.எஸ். நபார் அவர்களினால் வாசித்து மொழியப்பட்டதுடன் உதவி அதிபர் ஏ.எம். பாஹிமும் கலந்து கொண்டார்.

 

அத்துடன், மாணவர்களுக்கான உறுதிமொழி தரம் 11 ஐ சேர்ந்த மாணவி செல்வி ஏ.ஜி.எப். லீஸாவால் வாசித்து மொழியப்பட்டதுடன் அவ்வுறுதிமொழி அனைத்து மாணவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான மரக்கன்றுகளை பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதித்தலைவர் டி.கே.எம். மௌசீன் அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இந்நிகழ்வில் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், மட்டக்களப்பு கல்விக்கல்லூரியின் கட்டுறு பயிலுனர்கள், முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *