இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” இல் பங்கேற்ற மட்டக்களப்பு மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கல பதக்கத்தினை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
மட்டக்களப்பிலுள்ள புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் தரம் 10 மாணவியான துவிஷா ரமேஷ் மற்றும் புனித வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலை மாணவி நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஆகியோர் இளையோர் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
உலகின் 76 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த 522 யோகாசன வீர வீராங்கனைகளுடன் போட்டியிட்ட துவிஷா ரமேஷ் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஆற்றலை வெளிப்படுத்தி ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தனதாக்கிக் கொண்டார்.
உலக அரங்கில் ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள துவிஷா ரமேஷ் மற்றும் நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஆகியோரின் இந்த வெற்றி, அவர்களது குடும்பத்தினருக்கும், பாடசாலைக்கும் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திற்கும், இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இளம் வயதிலேயே சர்வதேச மட்டத்தில் திறமையை நிரூபித்துள்ள இரு மாணவிகளும் எதிர்காலத்தில் மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி தனது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்.

