அட்டாளைச்சேனை அக்/அந்-நூர் மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சாதனை

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின்  அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட  ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் இன்று(13) அட்டாளைச்சேனை கமு/அக்/அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

 

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் றஸ்மி கலந்து கொண்டார்.

 

இதன் போது அட்டாளைச்சேனை அக்/ அந்-நூர் மகா வித்தியாலய தரம் 3, தரம் 4 தரம் 5 ஆண் மற்றும் பெண் மாணவர்கள் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சம்பியன் இரண்டாமிடங்களைப் பெற்று வெற்றி பெற்று வலய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த வெற்றிக்குப் பிரதான காரணமாய் செயற்பட்டு வரும் இப் பாடசாலையின் முதல்வர் மிஸ்வர், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர், ஆரம்பப் பிரிவு வலயத்தலைவர், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்திற்கும் வாழ்த்துக்களை பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *