புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் விவாதப் போட்டி

அருகில் உள்ள தமிழ் பாடசாலைகளை ஒரே சங்கிலியின் கீழ் இணைக்கும் முகமாக எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பு விவாதப் போட்டி நடைபெற்றது.

அருகில் உள்ள தமிழ் பாடசாலைகளை ஒரே சங்கிலியின் கீழ் இணைத்து, கல்வி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக நேற்று எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறப்பு விவாதப் போட்டியொன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த விவாதப் போட்டியில் பாரதி தமிழ் மகா வித்தியாலயம் (எக்லாஸ்), பூனுகலை தமிழ் மகா வித்தியாலயம், கெளனி தமிழ் வித்தியாலயம் மற்றும் நாவலர் தமிழ் வித்தியாலயம் (பொலடகம), பனாவத்தை தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்க மாணவர்களை அனுப்பிவைத்து ஒத்துழைப்பு வழங்கிய குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கி முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபருக்கும் பழைய மாணவர் சங்கம் விசேட நன்றிகளை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் பிரதான நோக்கம் பாடசாலைகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தி, எட்டியனந்தோட்டையை சுற்றியுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளும் ஒரு சங்கியிலின் கீழ் இணைந்து ஒரு சமூகமாக முன்னேறுவதற்கான அடித்தளத்தை அமைப்பதாகும்.

குறுகியகால வெற்றிகளை மட்டுமல்லாது, நீண்டகால இலக்குகளையும் நோக்கங்களையும் அடைவதற்காக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே இதன் எதிர்பார்ப்பாகும். அந்தப் பயணத்தின் ஒரு படியாக இன்றைய நிகழ்வு அமைந்திருக்கும் என உறுதியாக நம்புவதாக பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *