நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவும் கல்வி அமைச்சும் இணைந்து, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக்கின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு மட்/தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் (09 – 11 ஆம் திகதிகளில்) இடம்பெற்றது.
பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அஸீஸ், பிரதி அதிபர் ஈ.எல்.எம். றுஸ்லி, மாவட்ட மத்தியஸ்தப் பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத் மற்றும் மாவட்ட பாடசாலை மத்தியஸ்த இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். அஜுன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக மாவட்ட மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இம்திஸா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மத்தியஸ்த சபைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். ஆஷாத், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நதீசன் ஜீவிதா மற்றும் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தின் பாடசாலை மத்தியஸ்த சபைக்கான பொறுப்பாசிரியர் திருமதி சமீனா நஜீம் ஆசிரியரும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
மாணவர்களிடையே பாடசாலை மத்தியஸ்தம், வன்முறையற்ற தொடர்பாடல், மற்றும் முரண்பாடுகளை இலகுவில் தீர்ப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
நல்லிணக்கம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் முரண்பாடுகளை சமரசமான முறையில் தீர்த்துக்கொள்ளும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி செயலமர்வு நடாத்தப்படுகிறது.

