காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு உற்பத்தி திறன் விருது

காத்தான்குடி பிரதேச செயலகம் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் சிட்டிசன் மிரர் – பிரிவு உற்பத்தித்திறன் குறியீடு 1.0 போட்டியில் மாவட்ட ரீதியில் 06 ஆம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் 25ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.

 

இதற்கிணங்க 2026.06.16 ஆம் திகதியன்று பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு காலி ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களும், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் எம்.ஐ. சுல்பிகார் அலி காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சார்பில் கலந்து கொண்டு இவ்விருதினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *