மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான எலும்பியல் சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. சந்திரகலா கோணேஷ்வரன் ஏற்பாட்டில் மகளிர் அபிவிருத்தி நிலைய ஒருங்கிணைப்பாளர் ஜே. எஸ். ஜோதி இணைப்பாக்கத்தில் பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட , 68 சிறுவர்களுக்கு இச்சாதனங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் 9820 மாற்றுத் திறனாளிகளில் 2435 பேர் பிறப்பிலிருந்து 18 வயதெல்லைக்குள் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கான பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் மாவட்ட செயலத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் ஹெல்ப் தெம் வோர்க் எனும் தொனிப்பொருளில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான அனுசரனையினை சிஏஎல் பௌன்டேசன் நிதியுதவியுடன் சென்ரர் போர் ஹன்டிகப்ஸ் நிறுவனம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பி அன்ட் ஓ தலைமையக உத்தியோகத்தர் எஸ்.எஸ். அத்தநாயக்க மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஜீ.தனுஷ்க டிலான் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

