மஸ்கெலியா பிரதேச பாடசாலை மாணவர்களின் நலனுக்காக புதிய பேருந்து சேவை

மஸ்கெலியா பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபையின் அவிஸ்சாவலை பேருந்து நிலையம் புதிய பேருந்து சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

 

இப் பேருந்து சேவையானது நல்லத்தண்ணியிலிருந்து மதியம் 12.45 மணி ஆரம்பிக்கப்பட்டு மஸ்கெலியா நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தை வந்தடையும்.

 

மீண்டும் மஸ்கெலியாவிலிருந்து – பிற்பகல் 2.00 மணி நோட்டன் வழியாக பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணிகளை ஏற்றிச் கொண்டு (மஹரகம வழியாக) கொழும்பை அடையும் நேரம் இரவு சுமார் 8.00 மணி கொழும்பிலிருந்து இரவு 11.00 மணி கினிகத்தேன வட்டவளை ஹட்டன், மஸ்கெலியா வழியாக நல்லத்தண்ணியவை அடையும் நேரம் அதிகாலை சுமார் 3.30 மணி வந்தடையும்.

 

மேலும், மஸ்கலியா நகரத்திலிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து, மஸ்கெலியா பாடசாலை அருகே 2.20 மணியளவில் வந்து சேரும் மாணவர்கள் ஆசிரியர்கள் பயணிகள் நாளாந்தம் இச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்த போக்குவரத்து சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கவும், மாணவர்களின் பயண வசதியை மேலும் விரிவுபடுத்தவும் பொதுமக்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

 

இச் சேவையினால் அவிஸ்சாவலை பேருந்து நிலையம் ஆதாயம் பெறும் பட்சத்தில் இன்னும் பல பேருந்து சேவைகள் இப் பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவிஸ்சாவலை பேருந்து நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *