பின்னோயா மேல் பிரிவு கொங்கிரீட் பாதை மக்கள் பாவனைக்கு திறப்பு

320ஈ ரொசல்லா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பின்னோயா மேல் பிரிவு பகுதியில் சுமார் 40 வருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட வீதி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திரு. செல்வராஜா விக்னேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொங்கிரீட் பாதையாக புனரமைக்கப்பட்டு நேற்று (21) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திரு. எஸ். விக்னேஸ்வரன் கலந்து கொண்டு பாதையை உத்தியோகப்பூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளித்தார். மேலும், அப்பகுதி தோட்டப் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

நீண்டகாலமாக போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு சிரமமாக இருந்து வந்த இவ்வீதியின் புனரமைப்பு, அப்பகுதி மக்களின் நீண்டநாள் தேவையை பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களின் போக்குவரத்து வசதியையும் மேம்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *