பாடசாலை முடிவடையும் உரிய நேரத்திற்கே வந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்லவும் – அதிபர் வேண்டுகோள்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பி.ப. 2 மணிக்கு முடிவடைவதால் மாணவிகள் தங்கள் கற்றல் செயற்பாடுகள் முடிவடைந்து மிக நீண்ட நேரமாக கல்லூரி வளாகத்திலும் வீதியோரங்களிலும் தங்களது வாகனங்களுக்காக, தங்களது பெற்றோருக்காக காத்திருப்பதால் கல்லூரி முடிவடையும் உரிய நேரமான பி.ப. 2 மணிக்கே வந்து உடனடியாக பிள்ளைச் செல்வங்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளுமாறு மிக அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன் என கல்லூரியின் அதிபர் ஏ.முஹம்மட் நௌஸாத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முடிவடையும் நேரம் பி.ப 02.00 மணியாகும். இருப்பினும் பெரும்பாலான மாணவிகள் தாம் வீடுகளுக்குச் செல்வதற்கான வாகனங்களின் வருகைக்காக மிக நீண்ட நேரம் கல்லூரி வளாகத்திலும் வீதியோரங்களிலும் காத்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு மாணவிகள் மிக நீண்ட நேரம் காத்திருப்பதானது பல்வேறு சிக்கல் நிலைமைகளை தோற்றுவிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பது நாமனைவரும் அறிந்த விடயமே.

 

எனவே அன்பின் பெற்றோர்களே…!

 

கல்லூரி முடிவடையும் நேரத்தில் உடனடியாக தங்களது பிள்ளைச் செல்வங்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளுமாறு மிக அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *