ஆனைவிழுந்தான் குளம் கரும்புத் தொழிற்சாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் கரும்பு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கரும்புத் தொழிற்சாலையின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று (23) காலை நேரில் பார்வையிட்டார்.

 

இதன்போது தொழிற்சாலையின் தற்போதைய செயற்பாடுகள், உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.

 

இந்தப் பார்வையிடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *