கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வளநிலையக் கட்டிடம் இன்று(23) திறந்து வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடம், பாடசாலை அதிபர் செல்வானந்தன் தலைமையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் வேதநாயகன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் மற்றும் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பிரதீபா காயத்திரி கஜபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், கௌரவ விருந்தினராக கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் தர்மரத்தினம், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

