கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டப் பகுதியில் பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் கரும்புச் செய்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கரும்புச் செய்கையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட உத்தியோகத்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சிவசங்கர், விவசாய ஆராய்ச்சி மேலதிக பணிப்பாளர் இராஜேஸ்கண்ணா, மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் புஸ்பராணி, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பிரகாஸ், இயற்கை வேர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் 20 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு 20 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. விளைவிக்கப்படும் கரும்புகளை இயற்கை வேர்கள் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

