2 பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ மதிப்பிலான போதைப்பொருளுடன், கனேடிய யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து துபாய் ஊடாக வருகை தந்த குறித்த யுவதி மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேசசாளர் தெரிவித்தார்.

