நுவரெலியா மர்ம மரணம்; பிரதான சந்தேகநபருடன் தொடர்புடைய பெண்ணும் தலைமறைவு

நுவரெலியாவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பொது உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் ஷ்யாமா தர்ஷனியின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான ஜெயசுந்தரவைத் தேடும் நடவடிக்கைகளின் போது, அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நெத்மி அமயா ரத்நாயக்கவும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியரின் மூன்று குழந்தைகளில் இருவரை குருநாகல் மாவட்டம் நாரம்மல பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளதுடன், இளைய குழந்தையை மட்டும் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஷ்யாமா தர்ஷனியின் உடல் முதலில் கண்டசாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் நிதி மோசடி குற்றச்சாட்டுகளிலும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *