கிளிநொச்சியில் நிதியுதவி திட்ட முன்மொழிவு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல்

“இலங்கையில் உள்ளூராட்சி மட்டத்தில் சமூகத் தகவல் மற்றும் அனுபவங்களை ஒருங்கிணைத்து காலநிலை இடர் குறைப்பு மற்றும் சமூக மீள்திறனைக் கட்டியெழுப்பும் அடப்டேசன் பன்ட் நிதியுதவி திட்ட முன்மொழிவு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல் கிளிநொச்சியில் நடைபெற்றது”

 

இலங்கையில் உள்ளூராட்சி மட்டத்தில் மீள்திறனைக் கட்டியெழுப்புவதற்காக சமூகத்தால் தகவல் மற்றும் அனுபவத்தைக் கொண்டு காலநிலை இடர் குறைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்” என்ற தலைப்பிலான திட்டத்திற்காக, கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐ.நா. வாழ்விட அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, குறித்த அடப்டேசன் பன்ட் அமைப்பிடம் வழங்கும் பொருட்டு திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன் தலைமையில் நடைபெற்றது.

 

முன்மொழியப்பட்ட இத்திட்டமானது, பிரஜாசக்தி தேசிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள நலிவடைந்த சமூகங்களின் காலநிலை மீள்திறனையும் தகவலமைப்புத் திறனையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், மாறிவரும் காலநிலைச் சூழல்களில் அவர்கள் காலநிலை அபாயங்களை நிலைத்தன்மையுடன் நிர்வகிக்கவும், தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் இயலும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எட்டு மாவட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கிளிநொச்சி மாவட்டமும் அடங்குகின்றது.

 

குறித்த கலந்துரையாடலில் யுஎன்டிபி தொழில்நுட்ப உத்தியோகத்தர் அசோக அஜந்த, கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன், வடமாகாண விவசாயப்பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் அழகக்கோன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராமசேவையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *