இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
பாடசாலை மாணவர்களிடையே சிறந்த ஆன்மிக ஒழுக்கப் பண்புகளை மேம்படுத்துவதற்கும் நற்பண்புகளுடைய பிரஜைகளை உருவாக்குவதற்கு அறநெறி பாடசாலைகள் பாரிய அளவிலான சேவையை வழங்கி வருகின்றது.
இதன் போது அறநெறி மாணவர்களுக்கு சிறந்த ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக கருத்துக்கள் தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், வெருகல் பிரதேச செயலாளர் எம். எம். அனாஸ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய. அநிருத்தனன் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம். குணரட்ணம் என ஆகியோர் கலந்து கொண்டனர்.


