9A சித்திகளைப்பெற்ற மாணவி ஹாபிழா அமீன் பாத்திமா சுஹா கௌரவிப்பு

இம்முறை 2025 (2026) வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்று மாஞ்சோலை கிராமத்திற்கும் பாடசாலை மற்றும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி அமீன் பாத்திமா சுஹாவின் வீட்டிற்கு நேரடியாகச்சென்று வாழ்த்தி, கெளரவித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நேற்று (26) மாஞ்சோலைக் கிராமத்தில் இடம்பெற்றது.

மாஞ்சோலை கிராம அபிவிருத்திச்சங்க நிருவாகிகள் நேரில் சென்று வாழ்த்தி நினைவுச்சின்னம், பரிசில்கள் வழங்கிக்கௌரவித்ததுடன், எதிர்கால கல்விப்பயணம் சிறப்பாக அமையவும் பிரார்த்தனைகளைத் தெரிவித்தனர்.

குறித்த மாணவி குறுகிய காலத்திற்குள் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *