மதுபாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் மட்டக்களப்பு பிராந்திய நிலையமான செட்டிபாளயத்தில் இயங்கும் “உவகை” இன் ஒரு வருட நிகழ்வும் கெளரவிப்பு நிகழ்வும் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு, பிராந்திய மனநல வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். டான் சௌந்தரராஜாவின் ஒருங்கமைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரனின் தலைமையில் நடை பெற்றது.
மனநலம் மற்றும் உள-சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவையாற்றி வரும் செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்களை கௌரவிக்கும் நோக்கில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அடங்கலான 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

