ஜயந்திபுரம் விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஹட்ட ஹிரகம தம்ம சிறி தேரரினால் இதன் போது தர்ம போதனைகளும் ஆசியுரை வழங்கப்பட்டது.
சித்திரை மாதத்தில் வரும் விசாக பௌர்ணமி நாளில் புத்தபிரானின் பிறந்த நாள், புத்தபிரான் ஞானம் பெற்ற மற்றும் புத்த பிரானின் பரிநிர்வாணம் அடைந்த மூன்று நிகழ்வுகளும் சித்திரை மாதத்தில் வரும் விசாக பௌர்ணமி நாளில் இடம்பெற்றதனை உலகில் உள்ள பெளத்தர்கள் நினைவு கூறும் முகமாக வெசாக் கொண்டாடப்படுகின்றது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வெசாக் நிகழ்வின் போது கலந்து கொண்டவர்களுக்கு பகல் உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.


