முன்னாள் விமானப்படை தளபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

சர்ச்சைக்குரிய மிக்  விமானக் கொள்வனவில் இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (10)   இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்  முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் ஆஜராகியுள்ளார்.

மேலும்,  இக் கொள்வனவு விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *