மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இலவச அமர ஊர்தி சேவை ஆரம்பம்!

களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை வளாகத்தில் வைத்து இலவச அமர ஊர்தி (பாடைகாவி) சேவை அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உப தவிசாளர் வசீகரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் ம.வினோராஜ், “இன்றிலிருந்து செயற்பாட்டிற்கு வந்துள்ள இந்த இலவச அமர ஊர்தி சேவையை, நமது பிரதேச மக்கள் மட்டுமன்றி இலங்கையின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
இச்சேவையைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் 0652250075 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இலவசமாகப் பயன்பெறலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *