பொதுப் போக்குவரத்தே அரசின் இலக்கு – பிரதமர் தெரிவிப்பு!

ஒரு நாடாக பொதுப் போக்குவரத்து குறித்து அனைவருக்கும் பொதுவானதொரு கனவு உருவாகி வருகின்றது என்றும், அந்தப் பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான மற்றும் முதன்மைத் தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது மற்றும் மக்களின் அன்றாடப் பயணங்களை இலகுபடுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை விளக்கும் போதே பிரதமர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்றுவதன் மூலமே பொதுமக்கள் தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதை குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *