பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சென்றார் ரஷ்ய ஜனாதிபதி

டெல்லி விமான நிலையத்தில் புட்டின் மற்றும் உயர்மட்டக் குழுவினரை இந்திய வெளிவிவகார இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்ற வெளிவிவகார ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையின் அடிப்படையில் பல பரிமாண மற்றும் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே ‘சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த உத்திசார் கூட்டாண்மை’யின் அடிப்படையில் பல பரிமாணங்களைக் கொண்ட நீண்டகால உறவுகள் நிலவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *