இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்:
இன்று எந்த விஷயத்திலும் நிதானமாகவும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. எதிர்பார்ப்புக்கு மாறான சில சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.

ரிஷபம்:
திட்டமிட்ட பணிகளை முடிப்பதில் அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். பணம் மற்றும் பொருட்கள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை.

மிதுனம்:

புதிய நண்பர்கள் அறிமுகமாகலாம். பொழுதுபோக்கு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வழக்கத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவதால் உங்களுடைய படைப்பாற்றல் வெளிப்படும்.

கடகம்:
குடும்ப உறுப்பினர்களிடம் கனிவாகவும் நிதானமாகவும் பேசுவது அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் ஏற்படலாம். வீட்டுப் பொருட்கள் தொடர்பாக எதிர்பாராத செலவுகள் வர வாய்ப்பு உள்ளது.

சிம்மம்:
புதிய ஆற்றலும் உற்சாகமும் ஏற்படும் நாள். புதிய இடங்களுக்குச் செல்லவும் புதிய நபர்களை சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்கலாம். சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி:
பணம் மற்றும் வருமான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. மனதில் குழப்பம் ஏற்படக்கூடிய நாள் என்பதால் பெரிய முதலீடுகள் அல்லது முக்கிய ஒப்பந்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டாம்.

துலாம்: உறவுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவு வரலாம்.

விருச்சிகம்:
புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படலாம். பிறருடைய தூண்டுதலால் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தனுசு:
பிறர் மத்தியில் உங்கள் கருத்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் நபர் அல்லது பெண் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கலாம். எதிர்பாராத சில நிகழ்வுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். விதிமுறைகளை மீறி செயல்படுவதைத் தவிர்க்கவும்.

மகரம்:
பிறருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்படுவீர்கள். முக்கிய பணிகளை அவசரமாக முடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை.

கும்பம்:
வேலை அல்லது கல்வி தொடர்பான பயணத் திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். விருப்பமான செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.  அவிட்டம், சதயம் நட்சத்திரத்தினருக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்:
பணம் அல்லது சொத்து தொடர்பான விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பெரிய தொகையை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. சொத்து வாங்குதல் அல்லது விற்பதில் குழப்பங்கள் ஏற்படலாம். வேலை காரணமாக அலைச்சல் அதிகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *