சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த இருவர் நேற்று சனிக்கிழமை (12) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட  தேடுதலின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,740 கடல் அட்டைகள்  மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்கப்பட்ட படகு மற்றும் கடல் அட்டைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *