இன்று நாமல் நீதிமன்றத்தில் ஆஜர்- கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியில் பலத்த பாதுகாப்பு

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எயார்பஸ்  விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்றைய தினம் புதன்கிழமை (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்ற வளாகப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் இவ்வழக்குத் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *