காத்தான்குடியில் இந்திய முதலீட்டாளர்கள் சங்கமம்!

 

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்த சர்வதேச வணிக மாநாடு வியாழக்கிழமை (17) சத்தார் எலைட் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம் அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இம் மாநாட்டில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான  புதிய வர்த்தகத் தொடர்புகளை உருவாக்குதல், இந்திய வர்த்தகர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்துதல்,  முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல்,  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்,  புதிய சந்தைகளை அடையாளம் காணுதல், கூட்டு வர்த்தக முயற்சிகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ் சர்வதேச வணிக மாநாட்டில் நாற்பதுக்கு மேற்பட்ட ப்இந்தியாவை சேர்ந்த வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள்,இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டதுடன் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *