“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று 18) குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
சேகரிக்கப்பட்ட குருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கினர்.
நாம் வழங்கும் ஒரு அலகு குருதி ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதால், தகுதியான அனைவரும் முன்வந்து குருதிக்கொடை வழங்க வேண்டும் என்பதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மனிதாபிமான செயற்பாடு வரவேற்கத்தக்கது.

