தற்போது நடைபெற்று வரும் கபொத சாதாரண தரப் பரீட்சையை குழப்பும் வகையில் போலியான அறிவித்தல் ஒன்று சமூக வலை தளங்களில் பகிரப்படுவதாக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இவ்வருட விஞ்ஞானப் பாடம் பரீட்சை வினாத்தாள் பாடவிதானபரப்புக்கு அப்பால் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும் இதற்குப் பதிலாகவிஞ்ஞான பாடத்துக்குதோற்றிய சகல மாணவர்களுக்கும் மேலதிகமாக 8 புள்ளிகள் வழங்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
65 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட சகல மாணவர்களுக்கும் A சித்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது
இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும்
அங்கீகரிக்கப்பட்ட ஊடக பரப்பில் அல்லது இணையத்தின் ஊடாக மட்டுமே அறிவிக்கப்படும் தகவல்களை தவிர போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என கல்வி அமைச்சு பரீட்சை திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளன.

