வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், குருநகர் களப்புப் பகுதியில் 192 கிலோகிராமுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை சோதனையிட்டபோது, 7 உரைகளில் 88 பொதிகளாகப் பொதி செய்யப்பட்டிருந்த 192 கிலோகிராமுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த சந்தைப் பெறுமதி ரூ.38 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, சந்தேகநபர் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *