அனோஜன் விடுதலைக்கு ஜம்இய்யதுல் உலமா ஆதரவு!

சவூதி அரேபியாவின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வரவேற்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்தை சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விடுதலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அனோஜனின் விடுதலைக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஜம்இய்யதுல் உலமா தயாராக இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சவூதி அரேபிய தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்திற்கும் சாணக்கியன் இராசமாணிக்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *