கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அப்பிராந்தியத்தின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை (6) முற்பகல் 9 மணி முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 9 மணி வரை உடுவாவல, ரஜபிஹில்ல மற்றும் கோனிகொட ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளதோடு, குறித்த காலப்பகுதிக்குத் தேவையான நீரினை முன் கூட்டியே சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *