மண்முனை தென் எருவில்பற்று செயலகத்தின் இரத்ததான நிகழ்வு – 2026

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் சிறப்பான முறையில்  மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது  தொடர்ச்சியாக இவ்வருடமும்  9வது தடவையாக மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்   இணைந்து ஏற்பாடு செய்த இந்த  இரத்ததான நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை (05.10.2026) மு.ப  8.30 மணி தொடக்கம் பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் அவர்களின் ஆலோசனை  மற்றும் வழிகாட்டுதலில், கணக்காளரும்   நலன்புரிச்சங்க தலைவருமான வ. நாகேஸ்வரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

விளையாட்டு கழகங்கள், இளைஞர்  கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் என நூற்றுக்கும்  அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *