மட்டக்களப்பு மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான குறுந்திரைப்பட திரையிடல் மற்றும் கதையாடல் நிகழ்ச்சித் தொடர் அண்மையில் நடைபெற்றது.
இதன் முதலாவது நிகழ்வு காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில், காங்கேயனோடை அல்-அக்ஷா மற்றும் ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலய மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது நிகழ்வு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் பாடசாலைகளின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், கலாசார உத்தியோகத்தர் மற்றும் கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கலை ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டன

