கிளிநொச்சியில் பிரமாண்ட மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி கிளிநொச்சி புளியம்பொக்கனை மாட்டு வண்டிச் சவாரித் திடலில் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண மாட்டு வண்டிச் சவாரிச் சங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாட்டு வண்டிச் சவாரிச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 153 ஜோடி காளைகள் பங்கேற்றன.

போட்டியில் பங்கேற்ற காளைகள் பல்வேறு பிரிவுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் இப்போட்டியை பார்வையிடுவதற்காக வடமாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.

பாரம்பரிய விளையாட்டுக்களை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த முக்கியமான கலாசார நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *