திருகோணமலை – கொழும்பு ஏ6 வீதியில் சொகுசு பேருந்து தீக்கிரை!

திருகோணமலையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வருவதற்காக கொழும்பு நோக்கி புறப்பட்ட தனியார் சொகுசு பேரூந்து ஏ6 பிரதான வீதியில் வைத்து முழுமையாக தீக்கிரையாகியுள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஹபரனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144 ஆம் கட்டைப் பகுதியில் வைத்து இன்றையதினம் அதிகாலை 3.00 மணியளவில் குறித்த பேரூந்து தீப்பற்றி முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது பேரூந்தில் சாரதி மற்றும் உதவியாளர் மாத்திரம் இருந்ததாகவும் அவர்கள் இருவரும் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

திருகோணமலைக்கு வர இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வருவதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளில் ஹபரனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *