கொழும்பு இந்துக் கல்லூரியில் பக்திபூர்வமாக தொடங்கியது நவராத்திரி விழா!

 

நவராத்திரி பெருவிழா இன்று (அக்டோபர் 11, 2026) பக்திபூர்வமாக தொடங்கியுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, இந்துக் கல்லூரி கொழும்பின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் தர வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் சிறப்பான பங்களிப்புடன் நவராத்திரி விழா இன்றைய தினம் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் திருமதி வாசுகி சுதாகரன் அம்மையாரின் முழுமையான ஆலோசனைகள் மற்றும் தொலைநோக்கு வழிகாட்டல்களுக்கு அமைவாக, மாணவர்கள் பண்பாட்டு விழுமியங்களை உணரும் வகையில் இந்நிகழ்வு மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இப்பூஜை நிகழ்வுகளை இந்துக் கல்லூரி கொழும்பு – ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ சிவகுமார சர்மா அவர்கள் சிறப்பாக நடாத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் ஒன்றிணைந்து கலைநயத்துடன் அமையப்பெற்றிருந்த கொலு பொம்மைகளை மலர்மாலையிட்டு அலங்கரித்து, அதன் முன் புனிதமான நவதானியங்களைப் பரப்பி ஆன்மீகச் சூழலை உருவாக்கினர்.

இறை உணர்வை ஊட்டும் வகையில் ‘சகலகலாவல்லி மாலை’ பதிகங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஒன்றுசேர்ந்து மனமுருகிப் பாடி அன்னையின் அருளை வேண்டி நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *