செத்தல் மிளகாய் அடங்கிய 60 கொள்கலன்கள் சுங்கத்தில் முடக்கம்!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாய் அடங்கிய 60 கொள்கலன்கள் சுங்கத்தில் தேங்கி கிடப்பதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தரம் குறித்த அனுமதிப்பத்திரம் கிடைக்காததால் விடுவிக்கப்படாமல தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க அத்தியட்சகர சமிந்த புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்படாமைக்குக் முக்கியக் காரணம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் கீழ் தரம்பற்றி அனுமதி வழங்கும் நிறுவனத்திடமிருந்து இதுவரை அனுமதி கிடைக்கப் பெறாமையே காரணமாகும்.

சிலவேளைகளில் காய்ந்த செத்தல் மிளகாய் அடங்கிய கொள்கலன்களின் எண்ணிக்கை 60யை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் புஞ்சிஹேவ தெரிவித்தார்.

இதற்கிடையில் சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கலன்களில் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட 9 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான தொகையென அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகம்சுந்தரம் தெரிவிக்கையில் இந்நிலைமை காரணமாக காய்ந்த மிளகாய் ஒரு கிலோகிராம் 1300 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பது மேலும் தாமதமானால் நாட்டில் காய்ந்த மிளகாய்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றார்.

இந்நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் இந்தியக் காய்ந்த மிளகாய் ஒரு கிலோகிராம் 900 முதல் 1000 ரூபா வரை விற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *