கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனின் தலைமையில் நேற்று(16) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் அழைப்பாளரும், பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான திருமதி. குமுதினி நிரஞ்சனின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டு வருகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ரி. பிரபாகரன், உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளக கணக்காய்வாளர் ந.பொன்ராணி. கிளிநொச்சி தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகர் வி. மோகனதாஸ், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டசெயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர், தேசிய கணக்காய்வு உத்தியோகத்தர், உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *