நாட்டின் 7 மாகாணங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் 7 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்குச் செல்லுபடியாகும்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இன்று (21) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது நாளை முற்பகல் 01.30 மணி வரை செல்லுபடியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *