மட்டக்களப்பில் பனைசார் உற்பத்திகள் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பனைசார் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (21) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பனை அபிவிருத்திச் சபையின் பொதுமுகாமையாளர் எஸ். ஜசிந்தன் மற்றும் மாவட்ட முகாமையாளர் ரீ. விஜயன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

மாவட்டத்தில் பனைசார் உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, பனை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் பனைமரக் கிராமங்களை நிறுவுதல், பனைசார் உற்பத்திகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் இத்துறையின் வளர்ச்சிக்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், முதலீட்டாளர்கள், கைவினைப் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் நான்கு பனைசார் பயிற்சி நிலையங்கள் ஊடாகக் கைவினையாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *