மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குவாதங்களைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.
ரிஷபம்: பணவரவு திருப்தி தரும். உடனிருப்பவர்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பொறுமையுடன் கையாளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.
மிதுனம்: தடைகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
கடகம்: குடும்பத்தில் நிம்மதி நிலவும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் திறமைகளுக்கு மதிப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.
சிம்மம்: வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பிறரின் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுங்கள். பணியில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.
கன்னி: வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் கோபத்தைத் தவிர்த்து அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.
துலாம்: எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். காரியங்களை முடிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.
விருச்சிகம்: எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். பணவரவு திருப்தி தரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.
தனுசு: கடன் பிரச்சினைகள் குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும். குடும்பம் மற்றும் வீடு தொடர்பான பணிகள் முன்னேறும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7.
மகரம்: எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் ஏற்படலாம். பணியிட மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.
கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு மேலோங்கும். உறவினர்களின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.
மீனம்: பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திப் படிப்பது வெற்றிக்கு உதவும். பயணங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

