தங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜூன் 29 அன்று தனது தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மீது ஹேக்கர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்தவுடன், அது தொடர்பான விசாரணைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

