அம்பாறை மாவட்டம், பொத்துவில் ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, யானை உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த யானை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட நேரடி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

