டெல்லியில் பாராளுமன்றம் அருகே மத்திய செயலகத்தின் வடக்கு பிளாக்கில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து டெல்லி தீயணைப்பு துறையை சேர்ந்த 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக புறப்பட்டு சென்றன.
அந்த கட்டிடத்தில் பழுது நீக்கும் பணிகள் நடந்து வந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தீ எரிந்த போது, வான் வரை கரும்புகை பரவியதாகவும் இதனால், கட்டிடங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து விட்டனவா? என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

